]]

Monday, September 17, 2007

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்... தொடர் 24

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்
Degree & Diploma Courses
S. ஆபிதீன் M.A., M.Sc., M.Phill., B.Ed.,
விரிவுரையாளர், விலங்கியல் துறை
செயலர், முன்னாள் மாணவர் கழகம்
Dr. ஜாகிர் உசேன் கல்லூரி, இளையான்குடி, சிவகங்கை மாவட்டம்.
E-mail: abideen245400@yahoo.com - Ph: (04564) 245400 / 265252
---------------------------------------------------------------------------------------
ஆடிட்டர் ஆவது எப்படி?

சமுதாயத்தில் டாக்டர்கள், இன்ஜினியர்கள், பேராசிரியர்கள் போன்றவர்களைப் போல அதிக அந்தஸ்து உள்ளவர்களில் ஆடிட்டரும் ஒருவர்.

இதற்கான படிப்பை சி.ஏ என்று அழைக்கின்றோம்.

கல்வித்தகுதி

சி.ஏ படிக்க குறைந்த பட்சம் 12ம் வகுப்பு படித்திருந்தாலே போதுமானது.

மேலும் இந்த படிப்பிற்கு குறைந்த மதிப்பெண் எதுவும் வரையறுக்கப்படவில்லை.

வயது உச்சவரம்பும கிடையாது.

எப்படி படிக்கலாம்?

இந்திய சார்ட்டாட் அக்கவுண்டண்ட் நிலையம் நடத்தும் 10 மாத அடிப்படைப் பயிற்சி (ஃபவுண்டேஷன் கோர்ஸ்) வகுப்பில் சேர்ந்து தேர்ச்சி பெற வேண்டும்.

இந்நிலையம் நடத்தும் அஞ்சல் வழிப்பயிற்சியோ அல்லது இந்நிலையம் அங்கீகரித்துள்ள கல்வி நிறுவனங்களில் நேரடிப் பயிற்சியோ பெற்றால்தான் அடிப்படைத் தேர்வை எழுத முடியும்.

பட்டதாரி மாணவர்கள் சி.ஏ படிப்பில் சேர்ந்தால் அவர்கள் அடிப்படை பயிற்சித் தேர்வை எழுதத் தேவையில்லை.

அடிப்படைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றதும், சார்ட்டர்ட் அக்கவுண்டண்டிடம் பயிற்சி பெற (Articled Clerk) மாணவர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அத்துடன் மூன்று ஆண்டு காலம் பாடப்பயிற்சியும் உதவித் தொகையும் கிடைக்கும்.

முதல் 12 மாத காலத்திற்குப் பிறகு இன்டர்மீடியட் தேர்வுகளையும் இரண்டரை ஆண்டுப் பயிற்சிக்குப் பிறகு இறுதித் தேர்வுகளையும் எழுதலாம்.

இறுதித்தேர்வு எழுதி பாஸ் செய்து விட்டால் சார்ட்டர்ட் அக்கவுண்டண்டாகப் பணியாற்றலாம்.

இப்படிப்பில் சேர்வது எளிது. ஆனால் திறமையும் இடைவிடாத முயற்சியும் கடும் உழைப்பும் இருந்தால் மட்டுமே சி.ஏ படிப்பில் தேர்ச்சி பெற முடியும்.

விபரங்களுக்கு அனுக வேண்டிய முகவரி

இந்திய சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் நிலையம்,
22 உத்தமர் காந்தி சிலை,
நுங்கம்பாக்கம்,
சென்னை - 600 034
S. ஆபிதீன்
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
வரலாறு படைத்த பெருநகரம் பரங்கிப்பேட்டை! - நம்
மக்கள் வாழ அமைப்போம் இராஜபாட்டை!!

0 comments: