Degree & Diploma Courses
செயலர், முன்னாள் மாணவர் கழகம்
Dr. ஜாகிர் உசேன் கல்லூரி, இளையான்குடி, சிவகங்கை மாவட்டம்.
புள்ளியியல் (Statistics) படியுங்கள்
பெரும்புள்ளி ஆகுங்கள்
ஐஐடி இந்திய அறிவியல் கழகம் இந்திய நிர்வாகக் கழகத்தைப் போன்று இந்தியாவில் பெருமை மிகு கல்வி நிறுவனங்களில் ஒன்று கல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளியியல் கழகம் Statistical Institute – ISI.
இங்கு படித்து முடிக்கும் மாணவர்களுக்கு மிகச் சிறப்பான வேலைவாய்ப்புகள் எளிதாக கிடைக்கின்றன.
இக்கழகத்தில் இளநிலை முதநிலை மற்றும் ஆய்வுப் படிப்புகளில் மாணவர்கள் சேரலாம்.
இங்கே படிக்கும் மாணவர்களுக்கு அரசின் உதவித் தொகையும் கிடைக்கிறது.
3 Year B. Statistics (Hons)
ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களைப் படித்து 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உதவித் தொகை மாதம் ரூ. 500
2 Year M. Statistics (Hons)
கணிதம் அல்லது புள்ளியியலில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். உதவித் தொகை மாதம் ரூ. 800
2 Year Master of Science (M.S) in Quantitative Economics
பொருளாதாரம், கணிதம், புள்ளியியல் அல்லது இயற்பியலில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் கணிதம் மற்றும் பொருளாதாரத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உதவித் தொகை மாதம் ரூ 800
2 Year M.Tech in Computer Science
கணிதம், புள்ளியியல், இயற்பியல், எலெக்ட்ரானிக் சய்ன்ஸ், கம்ப்யூட்டர் சய்ன்ஸ், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.இ., பி.டெக் இவற்றில் ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இப்பிரிவில் சேரவிரும்புவோர் பட்ட வகுப்பில் கணிதத்தை முதன்மைப் பாடமாகவோ அல்லது துணைப் பாடமாகவோ படித்திருக்க வேண்டும். உதவித் தொகை மாதம் ரூ. 1800.
கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள வகுப்புகளின் இறுதியாண்டில் படிக்கும் மாணவர்களும் மேற்கூறப்பட்ட பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
12 மற்றும் பட்ட வகுப்புகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலும் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்படிப்புகள் குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் பின்வரும் முகவரியை தொடர்பு கொள்ளலாம்
Head SQC Unit,
Indian Statistical Institute Chateau,
D’Ampa (I Floor),
110 Nelson Manickam Road,
Aminjikarai,
Chennai - 600029.
S. ஆபிதீன்
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
வரலாறு படைத்த பெருநகரம் பரங்கிப்பேட்டை! - நம்
மக்கள் வாழ அமைப்போம் இராஜபாட்டை!!
0 comments:
Post a Comment