பி.எஸ்.என்.எல்., சேவையில் குறையா?
இணைய தளத்தில் புகார் செய்ய வசதி!
வாடிக்கையாளர்கள் இணைய தளம் வழியாக அளிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க, வாடிக்கையாளர்கள் சேவை வசதியை பி.எஸ்.என்.எல்., கடந்த 15ம் தேதி முதல் துவக்கியுள்ளது.
இது தொடர்பாக பி.எஸ்.என்.எல்., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பி.எஸ்.என்.எல்., நிறுவனம் சாதாரண போன், மொபைல் போன், பிராட் பேண்ட், லேண்ட் லைன் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
தற்போது, வாடிக்கையாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு, அவர்கள் இணைய தளம் வழியாக அளிக்கும் புகாரை உடனடியாக தீர்க்கும் பொருட்டு, வாடிக்கையாளர் சேவை வசதியை பி.எஸ்.என்.எல்., தமிழக வட்டம் அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த புதிய முறையில் சாதாரண போன், மொபைல் போன், லேண்ட் லைன், பிராட் பேண்ட் உள்ளிட்ட புதிய இணைப்புகளுக்கு விண்ணப்பிப்பது, தற்போது வைத்திருக்கும் இணைப்புகளை வேறு இடத்திற்கு மாற்றுவது, பிராட் பேண்ட் வசதி, டாரிப் திட்டத்தை மாற்றுவது, டூப்ளிகேட் பில் வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு குறைகளை கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்து உடனடி தீர்வு பெறலாம்.
Customer Care Portal என்ற தலைப்பில், www.tamilnadu.bsnl.co.in அல்லது www.bsnl.co.in என்ற இணைய தள முகவரியில் தங்களது புகார்களை பதிவு செய்யலாம்.
www.bsnl.co.in என்ற இணைய தள முகவரி மூலம், value added services என்ற தலைப்பில் செல் ஒன் வாடிக்கையாளர்கள் தங்களின் போன் கட்டணத்தையும் செலுத்தலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment