தமிழக உருது அகடமியின் ஆட்சிக்குழு திருத்தியமைப்பு
தமிழக உருது அகடமியின் ஆட்சிக்குழுவை, முதல்வர் கருணாநிதி திருத்தியமைத்துள்ளார்.
இது தொடர்பான தமிழக அரசின் செய்திக்குறிப்பு:
உருது மொழி வளர்ச்சிக்காக முதல்வர் கருணாநிதி 2000ம் ஆண்டில், 'தமிழ்நாடு மாநில உருது அகடமி' என்ற அமைப்பை உருவாக்கினார்.
இந்த உருது அகடமியின் ஆட்சிக் குழுவை, முதல்வர் தற்போது திருத்தி அமைத்துள்ளார்.
இதன்படி, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆட்சிக்குழு தலைவராகவும், ஆற்காடு இளவரசர் முகமது அலி அசிம்ஜா துணைத் தலைவராகவும், நிதித்துறை செயலர், உயர்கல்வித் துறை செயலர், பிற்படுத்தப்பட்டோர் துறை செயலர், உருது அகடமியின் அலுவல் செயலர் மற்றும் பதிவாளர் ஆகியோர் அலுவல் சார் உறுப்பினர்களாகவும் செயல்படுவர்.
சென்னை காயிதே மில்லத் அரசு கல்லூரி உருது மொழித் துறைத் தலைவர் ஹயாத் பாஷா, சென்னை மாநிலக் கல்லூரி உருது மொழித் துறைத் தலைவர் யாஸ்மின் அகமது, வேலூர் மாவட்டம் உமராபாத் தார்ன்ஸ் சலாம் அரபிக் கல்லூரி ஆசிரியர் அப்துல் ரகுமான் கான்,
கவிஞர் அப்துல் ரகுமான், சென்னையைச் சேர்ந்த அபிபுல்லா பாஷா, கே.ஏ. வாதூத், முகமது ரியாஸ்துல்லா, சையத் மகமூத் அலி, சென்னை பல்கலைக் கழக உருது துறைத் தலைவர் நிசார் அகமது மற்றும் பன்மொழி அகராதித் திட்டப் பணியாளர் சஜ்ஜத் புகாரி, திருச்சி ஜமால் முகமது கல்லூரி உருது விரிவுரையாளர் அகமது பாஷா,
ராணி மேரி கல்லூரி உருது விரிவுரையாளர் பர்வீன் பாத்திமா, வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி முதல்வர் சையது சகாபுதீன், சென்னை பத்திரிகையாளர் மாலிக்குல் அஜீஸ், அகமது அலி பார்பியா உயர்நிலைப்பள்ளி முதல்வர் நசீமா பேகம் ஆகியோர் உருது அகடமியின் ஆட்சிக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment