எம்.எல்., படிப்பு விண்ணப்பிக்க 28ம் தேதி கடைசி
எம்.எல்., படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இம்மாதம் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அம்பேத்கார் சட்ட பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
2007-08ம் கல்வியாண்டில் முதுநிலை சட்டப் படிப்பில் (எம்.எல்.,) சேர விண்ணப்பங்கள் வழங்குவது மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் இம்மாதம் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே எம்.எல்., படிப்பிற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment