முதல்வருக்கு பாராட்டு விழா
கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய முதல்வரை பாராட்டி மாநாடு நடத்தப்படும் என்று சிறுபான்மையினர் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சிறுபான்மையினர் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் பிஷப் பீட்டர் பெர்னாண்டோ தலைமையில் நேற்று நடந்தது.
வக்பு வாரியத்தின் தலைவர் ஹைதர் அலி முன்னிலை வகித்தார். கத்தோலிக்க பிஷப்புகள் சின்னப்பா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிறுபான்மை கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய முதல்வர் கருணாநிதிக்கும் மற்றும் உறுதுணையாக இருந்த அனைத்து கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கும் விதத்தில் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் சார்பாக ஒரு மாபெரும் மாநாடு நடத்துவது என்று அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
0 comments:
Post a Comment