நாணயக் கண்காட்சி : 27ல் துவக்கம்
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மூன்று நாள் நாணயக் கண்காட்சி நடத்த தொண்டை மண்டல நாணயவியல் கழகம் முடிவு செய்துள்ளது.
தொண்டை மண்டல நாணயவியல் கழகத்தின் சிறப்பு பேரவைக் கூட்டம் முதலியார்பேட்டை அலுவலகத்தில் நடந்தது. நிறுவனத் தலைவர் கோபிராமன் தலைமை தாங்கினார். செயலாளர் தியாகி முத்து சுந்தரமூர்த்தி வரவேற்றார்.
கூட்டத்தில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு புதுச்சேரி சுற்றுலாத் துறையின் ஆதரவுடன், அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் வரும் 27ம் தேதி துவங்கி 29ம் தேதி வரை மூன்று நாட்கள் நாணயக் கண்காட்சி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
பொதுமக்கள், மாணவர்கள் தாங்கள் சேகரித்து வைத்துள்ள அரிய வகை நாணயங்கள், பணத் தாள்கள், கலைப்பொருட்கள் போன்றவற்றை இந்தக் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கலாம்.
பங்கு பெறும் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்படும்.
கண்காட்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், எண். 24, பாரதி மில் வீதி, முதலியார் பேட்டை, புதுச்சேரி 4 என்ற முகவரியில் முன்கூட்டியே தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு 0413 2356110 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
0 comments:
Post a Comment