30 வயதுக்கு உட்பட்ட இந்திய பெண்கள் வெளிநாட்டில் பணியாற்ற தடை
வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்திய பெண்கள், பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.
இதை கருத்தில் கொண்டு வளைகுடா நாடுகளுடன் இந்திய தூதர்கள் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு அதிரடி முடிவுக்கு வந்துள்ளனர்.
அதன்படி, பள்ளிப்படிப்பை முடிக்காத 30 வயதுக்கு உட்பட்ட பெண்கள் வெளிநாடுகளில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தடை இம்மாதத்தில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.
இந்த தடையை மீறி வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்கள், விமான நிலையத்திலேயே குடியேற்ற பிரிவு அதிகாரிகளால் பிடித்து திருப்பி அனுப்பப்படுவார்கள்.
வீட்டு வேலை செய்யும் இந்திய பெண்களுக்கு செல்போன் வழங்க வேண்டும் என்றும், அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் அதிகாரிகளை தொடர்பு கொள்ள செல்போன் உதவியாக இருக்கும் என்றும் புதிய விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment