]]

Wednesday, September 26, 2007

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்... தொடர் 29

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்
Degree & Diploma Courses

S. ஆபிதீன் M.A., M.Sc., M.Phill., B.Ed.,

விரிவுரையாளர், விலங்கியல் துறை
செயலர், முன்னாள் மாணவர் கழகம்

Dr. ஜாகிர் உசேன் கல்லூரி,
இளையான்குடி, சிவகங்கை மாவட்டம்.

E-mail: abideen245400@yahoo.com - Ph: (04564) 245400 / 265252

-------------------------------------------------------------------------------------------------

பொறுப்பான பதவி பெற பொருளாதாரம் படிக்கலாம்

பொருளாதாரம்

இந்த வார்த்தைதான் வாழ்க்கையை திரும்பிப் பார்க்க வைக்கிறது.

சோம்பலை முறிக்கிறது.

தனி மனிதன் குடும்பம், அமைப்பு, சமூகம் தேசம் என எல்லாம் சார்ந்து நிற்கும் அத்தியாவசியமான துறை இது.

காலங்கள் மாறினாலும் மாறாத செல்வாக்கு பெற்றிருக்கும் பொருளாதாரம் பற்றிப் படிப்பதற்காக அயல்நாடுகளுக்குச் செல்வது இந்தியாவில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பொருளாதாரம் சம்பந்தப்பட்ட படிப்புகள் ஆறு மாத சான்றிதழ் படிப்பு ஓராண்டு டிப்ளமோ படிப்பு என பலவகை இருந்தாலும் தமிழக கல்லூரிகளில் பி.ஏ எக்னாமிக்ஸ் என்ற பட்டப்படிப்பு தான் மிகச் சிறப்பானதாக இருக்கிறது.

இந்தத்துறையில் வங்கியியல் உலகப் பொருளாதாரம், தொழில் பொருளாதாரம் தொழிலாளர் பொருளாதாரம், விவசாய பொருளாதாரம் பொது நலப் பொருளாதாரம் பொதுநிதி எக்னோமெட்ரிக்ஸ் காந்திய பொருளாதாரம் பொருளாதார மானுடவியல் பொருளாதார புவியியல் என்று பல கிளைத் துறையில் உள்ளன.

இதில் பி.ஏ பி.எஸ்.சி போன்ற பட்டப்படிப்புகளும் முதுநிலை பட்டயப்படிப்புகளும் உள்ளன.

பல கல்லூரிகளில் எக்னாமிக்ஸ் படிப்புக்கு பெரிய போட்டா போட்டியே நடக்கிறது.

பி.ஏ பொருளாதாரம் படித்துவிட்டு பிறகு எம்.ஏ எக்னாமிக்ஸ் முடித்து அதில் டாக்டர் பட்டம் பெறுபவர்கள் நாட்டின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்களாகத் தலைநிமிரும் வாய்ப்புகள் உள்ளது.

முன்னாள் மத்திய நிதியமைச்சர்கள் மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் இத்துறையிலிருந்து தான் பொது வாழ்வுக்குப் புறப்பட்டார்கள்.

அவர்கள் மட்டுமா உலகின் பெரும்பாலான நிதியமைச்சர்கள் பொருளாதாரத் துறையில் ஆய்வுகளை முடித்துதான் இன்று உலகின் பொருளாதாரத்தை இயக்கி கொண்டிருக்கிறார்கள்.

சரி இனி கூடுதல் விவரங்களுக்குச் செல்வோம்.

இத்துறையில் ஆர்வமுள்ள மாணவர்களை ஈர்ப்பதற்காகவே மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் காத்துக் கொண்டிருக்கிறது.

பொருளாதாரப் படிப்பகளுக்குச் சிறந்த மாணவர்களை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை கோட்டூர்புரத்தில் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் கல்வி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

கணிதம், புள்ளியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இயற்பியல் போன்ற அறிவியல் பாட மாணவர்களும்

பி.ஏ பொருளாதாரம் பி.காம். பி.பி.ஏ போன்ற பட்டம் படித்த மாணவர்களும் இதில் சேரலாம்.

பிளஸ் டூ நிலையில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்திருக்க வேண்டும்.

இதற்குத் தனியே நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

மாணவர் சேர்க்கைப்பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு தலா ரூ 1500 வீதம் உதவித் தொகை வழங்கப்படும்.

பி.எச்.டி பட்ட ஆய்வை மேற்கொள்வதற்கான மையமாக இக்கல்வி நிலையத்தை அண்ணா பல்கலைக்கழகமும், சென்னை பல்கலைக்கழகமும் அங்கீகரித்துள்ளன.

பொறியியல் துறையினருக்காக எம்.டெக் இன்டஸ்ட்ரியல் எக்னாமிக்ஸ் (3 செமஸ்டர் படிப்பு) கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.

அகில இந்தியத் தொழில நுட்பக் கல்வி கவுன்சிலின் அனுமதி கிடைத்ததும் இப்படிப்பு தொடங்கப்படும்.

மேக்ரோ பைனான்ஸ், பைனான்சியல் அனாலிஸிஸ், ரிஸ்க் மேனேஜ்மென்ட் போன்ற துறைகளில் முதநிலை டிப்ளமோ படிப்புகளைத் தொடங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இத்துறை குறித்து அதிக விபரம் பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

The Director,
The Madras School of Economics,
Kotturpuram,
Madras.

எந்தப்படிப்பும் முறைப்படி படிக்காதவர்கள் கல்வியறிவு இல்லாத அதே நேரத்தில் அனுபவ அடிப்படையில் சமையல், சலவை போன்ற தொழிலாளர்கள், தெரிந்தவர்கள் வேலைக்கு இங்கு முயற்சிக்கலாம்.

Head Quarters,
Artillery Centre,
Hyderabad – 500 031.


S. ஆபிதீன்

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

வரலாறு படைத்த பெருநகரம் பரங்கிப்பேட்டை! - நம்

மக்கள் வாழ அமைப்போம் இராஜபாட்டை!!

0 comments: