பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் கோட்டா தவறில்லை
'முஸ்லிம்களில் ஒரு பிரிவினர், பிற்படுத்தப்பட்டோராக ஒதுக்கப்படும்போது, அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதில் தவறில்லை' என்று, சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 4 சதவீத இடஒதுக்கீடு அளிக்க, ஆந்திர அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. அதை எதிர்த்து போடப்பட்ட மனுவை, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
இப்போது இந்த விவகாரம், சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்துள்ளது. வழக்கில், அவசர சட்டத்துக்கு எதிராக பா.ஜ., தலைவரும், பிரபல வக்கீலுமான அருண் ஜெட்லி வாதாடினார்.
'இரண்டு முறை அவசர சட்டம் கொண்டுவரப்பட்டு, அவை நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டன.
மூன்றாவது முறையாக இப்போது அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆந்திராவில், 2 சதவீத முஸ்லிம்களை தவிர, மற்றவர்களுக்கு ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது' என்றார் அவர்.
ஆந்திர அரசு வக்கீல் இந்திரா ஜெய்சிங் கூறுகையில், 'முஸ்லிம் சமுதாயத்தில் 34 பிரிவினர், ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பித்தனர். அவர்களில், 10 பிரிவினர் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு ஒதுக்கீடு அளிக்கப்படும்' என்றார்.
'முஸ்லிம் மதத்தில் உள்ள சில பிரிவினர், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என்று பிரித்து வைக்கும்போது, அவர்களுக்கு பொருளாதார அடிப்படையில், ஒதுக்கீடு தரலாம். அதில் தவறில்லை' என்று சுப்ரீம் கோர்ட் கருத்து கூறியுள்ளது.
0 comments:
Post a Comment