]]

Wednesday, September 26, 2007

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்... தொடர் 30

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்
Degree & Diploma Courses

S. ஆபிதீன் M.A., M.Sc., M.Phill., B.Ed.,
விரிவுரையாளர், விலங்கியல் துறை

செயலர், முன்னாள் மாணவர் கழகம்

Dr. ஜாகிர் உசேன் கல்லூரி,

இளையான்குடி, சிவகங்கை மாவட்டம்.

E-mail: abideen245400@yahoo.com - Ph: (04564) 245400 / 265252

-------------------------------------------------------------------------------------------------

சமூக சேவகர்களாக வேண்டுமா...

சமூக சேவை (Social Service) படியுங்கள்

சமூக சேவையில் நாட்டம் உள்ளவர்களுக்கு அதிக திருப்தியும் அபரிமிதமாக அமைதியும் எளிதில் கிடைக்கிறது.

சமூக சேவையை சரியான விதத்தில் செய்து முடிப்பவர்களின் புகழ் உள்நாடுகளில் மட்டுமல்லாது உலக அளவிலும் சென்றடைவது ஆச்சரியம் இல்லாத ஒன்று.

இக்கல்வி பற்றிய சில விவரங்களை இங்கே காணலாம்.

பண்ணாட்டு சேவை நிறுவணங்களான (WHO, UNICEF) போன்றவை மட்டுமல்லாது நம் நாட்டு கல்வி நிறுவணங்கள் ஆலோசனை மையங்கள், மருத்துவமனைகள், சிறைச்சாலைகள், குற்றத்தடுப்பு பள்ளிகள், திட்டங்கள், அரசு நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள் (NGO) போன்றவற்றிலும் நிறுவனங்களிலும் சமூக சேவகர்களில் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

சமூக சேவை அமைப்புகள் பங்கேற்ற மாணவர்களுக்கு அட்மிஷனின் போது கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்கின்றன.

என்ன படிப்பது?

B.A., in Social Work

Community Social Work.

Bachelor in Social Work

Family and Child Welfare

School/Educational Social Work

Labour Welfare and Industrial Relation

Urban and Rural Community Development

கல்வித்தகுதி

இப்படிப்பில் சேர்வதற்கு குறைந்த பட்சம் 12 தேறியிருக்க வேண்டும்.

கற்றுத்தரும் குறிப்பிடத் தகுந்த இடங்கள்

காவேரி மகளிர் கல்லூரி - திருச்சி

மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க் - சென்னை

சென்னை பல்கலைக்கழகம் - சென்னை

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் - மதுரை

பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் சோஷியல் வொர்க - கோவை


S. ஆபிதீன்
இன்ஷா அல்லாஹ் தொடரும்...


வரலாறு படைத்த பெருநகரம் பரங்கிப்பேட்டை! - நம்
மக்கள் வாழ அமைப்போம் இராஜபாட்டை!!

0 comments: