]]

Friday, September 28, 2007

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்... தொடர் 31

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்
Degree & Diploma Courses

S. ஆபிதீன் M.A., M.Sc., M.Phill., B.Ed.,

விரிவுரையாளர், விலங்கியல் துறை
செயலர், முன்னாள் மாணவர் கழகம்

Dr. ஜாகிர் உசேன் கல்லூரி,
இளையான்குடி, சிவகங்கை மாவட்டம்.

Ph: (04564) 245400 / 265252

-------------------------------------------------------------------------------------------------

வேளாண் மற்றும் வேளாண் தொழில் துறைகள் (Agriculture Allied Industries)

வேளாண் வணிகம், வேளாண் தொழிற்சாலைகள், வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வி, வேளாண் பத்திரிக்கையியல் என்று வேளாண்துறை பல பிரிவுகளாக விரிவடைந்து வருகிறது.

மாநில அரசின் வேளாண் துறை, நேஷனல் ஸீடு (Seed) கார்ப்பரேஷன் CASE, ஸ்டேட் ஃபார்ம் கார்ப்பரேஷன் CASE, வேர் ஹவுசிங் கார்ப்பரேஷன், ஃபுட் கார்ப்பரேஷன், உணவு சார்ந்த தொழிற்சாலைகள், உரத் தொழிற்சாலைகள், பால் மற்றும் கோழிப் பண்ணை நிர்வாகம் ஏற்றுமதி நிறுவனங்கள், தரக்கட்டுப்பாடு தோட்டங்கள் ஆகியவற்றில் வேலைவாய்ப்பு உண்டு.

நுழைவுத் தேர்வு முறை

புது டில்லியில் உள்ள இந்தியன் கவுன்சில் ஆஃப் அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச் நடத்தும் நுழைவுத் தேர்வு எழுதவேண்டும்.

இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், வேளாண்மை பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

விவசாயத்தில் பி.ஈ., பி.எஸ்ஸி பட்டம் பெறலாம.

கற்றுத்தரும் இடங்கள்

வேளாண்மைக் கல்லூரி ஆராய்ச்சி மையம்,
(கோவை, மதுரை, கிள்ளிக்குளம், திருச்சி).


பொறியியல் கல்லூரி (கோவை, குமுலூர்).


ஃபாரஸ்ட் காலேஜ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (மேட்டுப்பாளையம்)

ஹார்டிகல்சர் காலேஜ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (பெரியகுளம்)

Centre for Management in Agriculture, IIM, Ahmedabad

Universal College of Agriculture, Calcutta

Centre for Agriculture, Aligarh

Allahabad Agricultural Institute, Allahabad

Institute of Agricultural Sciences, Varanasi.

S. ஆபிதீன்
இன்ஷா அல்லாஹ் தொடரும்...

வரலாறு படைத்த பெருநகரம் பரங்கிப்பேட்டை! - நம்

மக்கள் வாழ அமைப்போம் இராஜபாட்டை!!

0 comments: