]]

Wednesday, September 26, 2007

நாணய கண்காட்சி துவக்கம்

மூன்று நாள் நாணய கண்காட்சி புதுச்சேரியில் இன்று துவக்கம்

உலக சுற்றுலா தினத்தையொட்டி சுற்றுலா துறை ஆதரவுடன் தொண்டை மண்டல நாணயவியல் கழகம் சார்பில் மூன்று நாள் நாணய கண்காட்சி இன்று துவங்குகிறது.

இது குறித்து நாணயவியல் கழக நிறுவனத் தலைவர் கோபிராமன் நேற்று கூறியதாவது:

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறை ஆதரவுடன் தொண்டை மண்டல நாணயவியல் கழகம் சார்பில் மூன்று நாள் நாணய கண்காட்சி இன்று (27ம் தேதி) துவங்கி வரும் 29ம் தேதி வரை மூன்று நாட்கள் அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி ஆடிட்டோரியத்தில் நடக்கிறது.

வரலாற்று ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டும். அதுகுறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த நாணயக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கண்காட்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொது மக்களின் அரிய பழங்கால நாணயங்கள் மற்றும் பணத் தாள்களின் தொகுப்புகள் இடம் பெறுகின்றன.

கண்காட்சி துவக்க விழாவிற்கு பள்ளி முதல்வர் லூர்துசாமி புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்ற சிறப்புத் தலைவர் ராமன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

நாணயவியல் கழகத் துணைத் தலைவர் கணேசன் வரவேற்கிறார். நாணயவியல் கழக நிறுவனத் தலைவர் கோபிராமன் தலைமை தாங்குகிறார். சுற்றுலாத் துறை செயலர் அன்பரசு கண்காட்சியைத் திறந்து வைக்கிறார்.

சுற்றுலாத் துறை இயக்குனர் முகமது மன்சூர், புதுச்சேரி பொறியியல் கல்லுõரி முதல்வர் பழனிவேலு ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர். தியாகி சுந்தரமூர்த்தி நன்றி கூறுகிறார்.

தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கண்காட்சியை இலவசமாகப் பார்வையிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: