அக்டோபர் 1-ந்தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் மாலை நேர கோர்ட்டுகள் செயல்படும்
ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி. ஷா தகவல்
அக்டோபர் 1-ந் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் மாலை நேர கோர்ட்டுகள் செயல்படும் என்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி. ஷா தெரிவித்தார்.
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி. ஷா நேற்று விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கிருந்து அவர் கார் மூலம் தேனியில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்தார்.
தேனி வந்த அவரை மாவட்ட கலெக்டர் ஹர்சஹாய் மீனா மற்றும் நீதிபதிகள் வரவேற்றனர்.
மாவட்ட முதன்மை நீதிபதி ராமலிங்கம், குற்றவியல் தலைமை நீதித்துறை நடுவர் டி.என். கலைவாணி, மற்றும் நீதிபதிகளுடன் தேனி மாவட்டத்தில் நடக்கும் வழக்குகள் பற்றி சென்னை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா கலந்துரையாடினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அக்டோபர் 1-ந் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் மாலை நேர கோர்ட்டுகள் செயல்படுத்தப்படும். மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு வரும் சிறு வழக்குகளை விசாரித்து உடனுக்குடனும், வழக்குகளை துரிதமாக முடிக்கவும் இந்த மாலை நேர கோர்ட்டுக்கள் பயன் அளிக்கும்.
இந்த கோர்ட்டுகள் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். ஒவ்வொரு நாளும் ஒரு நீதிபதி வழக்குகளை விசாரணை நடத்துவார். சிறு வழக்குள் உடனடியாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும்.
மேற்கண்டவாறு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தெரிவித்தார்.
0 comments:
Post a Comment