ஜம்போ பாஸ்போர்ட் இன்று முதல் வழங்கப்படும்
மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தகவல்
மொத்தம் 64 பக்கங்கள் கொண்ட ஜம்போ பாஸ்போர்ட்டுகள் இன்று (வியாழக்கிழமை) முதல் வழங்கப்படுகின்றன என்று மண்டல பாஸ்போர்டë அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி நேற்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதிய வடிவிலான ஜம்போ பாஸ்போர்ட் புத்தகங்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் வழங்கப்படும். இதில் மொத்தம் 64 பக்கங்கள் இருக்கும். இதற்கு ரூ.1,500 கட்டணமாக வசூலிக்கப்படும். சாதாரணமாக 36 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட் புத்தகங்களுக்கு தற்போது ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பாஸ்போர்ட் பெறுவதற்கான வழிமுறைகள் எளிதாக்கப்பட்டன. இதையடுத்து தக்கல் பாஸ்போர்டë விண்ணப்பங்கள் அதிகளவு வர தொடங்கியுள்ளன.
இதையடுத்து தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள புதிய முறையில் வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளமான http://passport.gov.in என்ற முகவரியிலே பதிவு செய்து பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கும் நாள், நேரம் ஆகியவற்றை விண்ணப்பதாரர் வசதிக்கேற்ப தெரிந்து கொள்ளலாம்.
இணையதளத்தில் பதிவு செய்தவுடன் விண்ணப்பத்தின் பதிவு எண், நாள் மற்றும் தேதியுடன் கூடிய ஒரு அச்சடித்த ரசீது கிடைக்கும். அதில் ஒரு போட்டோவை ஒட்டி அதில் குறிப்பிட்டுள்ள நாள், நேரத்தில் உண்மைச் சான்றிதழ்களுடன் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
முன்பு போல வரிசையில் நீண்டநேரம் நின்று டோக்கன் வாங்கி விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இனிமேல் டோக்கன் முறையில் தக்கல் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் வாங்கப்படமாட்டாது.
வரும் 17-ந் தேதி முதல் இணையதளம் மூலம் மட்டுமே தக்கல் விண்ணப்பங்கள் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
0 comments:
Post a Comment