]]

Sunday, September 16, 2007

பள்ளி படிப்பை இடையில் நிறுத்திய குழந்தைகள்

பள்ளி படிப்பை இடையில் நிறுத்திய குழந்தைகள் மீண்டும் வகுப்பறைக்கு செல்ல புதிய செயல் திட்டம்

பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்துவோர் பற்றிய விவரங்களைக் கண்டுபிடித்து கம்ப்யூட்டரில் பதிவு செய்து, மீண்டும் அவர்களை பள்ளியில் சேர்ப்பது பற்றிய செயல் திட்டத்தை தமிழக கல்வித்துறை வகுத்துள்ளது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் வேலையின்மை, வறுமை போன்ற காரணங்களால் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவோர் அதிகரித்து வருகின்றனர்.

பல ஆயிரம் குழந்தைகள் வேலைக்கு செல்கின்றனர். மலைப் பகுதிகளில் வசிப்போரில் படிப்பை இடையில் விடுவோர் எண்ணிக்கை அதிகம்.

70 சதவீதம் குழந்தைகள் படிப்பை இடையில் நிறுத்தி விட்டதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுகுறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. எட்டாயிரத்து 600 பேர் இந்த கல்வியாண்டில் படிப்பை இடையில் நிறுத்திவிட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்பத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

படிப்பை பாதியில் நிறுத்தியவர்களைக் கண்காணித்து, மீண்டும் பள்ளிக்கு அனுப்ப வசதியாக கம்ப்யூட்டர் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

படிப்பை பாதியில் நிறுத்தியவர்களின் விவரங்களைப் பதிவு செய்து, மீண்டும் பள்ளிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த மாணவ, மாணவியர் தொடர்ந்து பள்ளி செல்வது கண்காணிக்கப்படும்.

இது தொடர்பாக கிராம கல்விக் குழுவும் கண்காணிக்கும்.

இந்த விவரங்களை அந்தந்த மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்வார்.

மலை கிராமப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும் முறையிலும் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.

அவர்கள் அணுகுமுறையிலும் போதிய மாற்றத்தைக் கொண்டு வர கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இதற்கான புதிய செயல் திட்டம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

0 comments: