எட்டாவது வரை மதிய உணவு!
எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மதிய உணவு அளிக்கும் திட்டத்தை விரிவுப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறை உயர் கமிட்டி, இது தொடர்பாக சமீபத்தில் ஆலோசித்தது. இப்போது ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவு அளிக்கப்படுகிறது. இதை, எட்டாம் வகுப்பு வரை நீட்டிக்கலாம் என்று அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இந்த திட்ட விஸ்தரிப்பை நிதி அமைச்சகம் ஒப்புக் கொண்டது. 'பட்ஜெட்டில் அறிவித்த உத்தரவாதத்தை நிறைவேற்றும் வகையில், மதிய உணவுத் திட்டம், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரைக்கும் நீட்டிக்க முடிவு செய்யப்படும். அடுத்த நிதியாண்டில் இது அமலாகும்' என்று, நிதியமைச்சர் சிதம்பரம் கூறினார்.
'பள்ளியில் படிக்கும் 11 வயது முதல் 14 வயது வரை உள்ள மாணவ, மாணவிகள் உடல் ஆரோக்கிய வளர்ச்சியை கருத்தில் கொண்டுதான் விரிவுப்படுத்த திட்டமிடப்படுகிறது' என்றும் அமைச்சர் கூறினார்.
மதிய உணவுத் திட்டத்தால், 11 கோடியே 20 லட்சம் பள்ளிக் குழந்தைகள் பயன் பெறுகின்றனர்.
மதிய உணவுத் திட்டத்துக்காக, மாநிலங்களுக்கு 23 லட்சம் டன் உணவு தானியங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.
பள்ளியில் குழந்தைகள் முழு அளவில் சேர வேண்டும்.
பள்ளிப்படிப்பை நிறுத்தக்கூடாது என்பதை ஊக்குவிக்கத் தான், மதிய உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், குழந்தைகள் கணிசமான பேர், பள்ளியில் இருந்து பாதியில் நிற்கும் சதவீதம் குறைந்தபாடில்லை.
மதிய உணவை நீட்டித்தால், பள்ளியில் எட்டாவது வரை படிக்க மாணவர்கள் வருவர் என்று கணக்கிட்டுத்தான், அதை நீட்டிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


0 comments:
Post a Comment