உருது அகடமியின் முதல் கூட்டம்
"நூலகங்களில் உருது புத்தகங்களை வாங்க நிதியுதவி அளிப்பது'' என, உருது அகடமியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தமிழக அரசு புதிதாக அமைத்துள்ள மாநில உருது அகடமியின் முதல் கூட்டம், அதன் தலைவரான உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடந்தது.
அகடமியின் துணைத் தலைவரான ஆற்காடு இளவரசர் முகமது அப்துல் அலி, உயர்கல்வித் துறைச்செயலர் கணேசன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலர் வாசுதேவன், நிதித்துறை சிறப்பு செயலர் பிரவீன்குமார், அகடமியின் பதிவாளர் அஷ்பகர் ரகுமான் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அகடமியின் நிலைக்குழுவில் ஆறு உறுப்பினர்களை நிர்வாகக் குழு இக்கூட்டத்தில் நியமித்தது.
மேலும், புத்தகங்கள் வெளியிடும் ஆசிரியர்களுக்கு நிதியுதவி அளித்தல்,
தகுதி வாய்ந்த உருது மாணவர்களுக்கு விருதுகள் வழங்குதல்,
இலக்கியவாதிகளுக்கு விருது வழங்குதல்,
நூலகங்களில் உருது புத்தகங்கள் வாங்க நிதியுதவி அளித்தல்,
கருத்தரங்குகள் நடத்துதல் போன்ற திட்டங்களைச் செயல்படுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஒவ்வொரு திட்டத்துக்கும் தேவையான நிதியுதவியும் இக்கூட்டத்தில் ஒதுக்கப்பட்டது.
0 comments:
Post a Comment