பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தில் கம்ப்யூட்டர் திருட்டு
பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தில் ரூ. 44 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு கம்ப்யூட்டர்களை திருடிசென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.
பரங்கிப்பேட்டையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு கடந்த 6ம் தேதி இரவு மர்ம ஆசாமிகள் சிலர் உள்ளே நுழைந்துள்ளனர்.
சத்தம் கேட்டதும் வாட்ச்மேன் விமல் ராஜ், சக வாட்ச்மேன் ஜீவானந்தம் என்பவருடன் சத்தம் கேட்ட இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது பெட்டியுடன் நின்றிருந்த மர்ம ஆசாமிகள் பெட்டியை போட்டுவிட்டு ஓடி விட்டனர்.
பின்னர் மறுநாள் காலை வாட்ச் மேன் விமல் ராஜ், அலுவலக ஊழியர்களுடன் திருடுப் போன இடத்திற்கு சென்று பார்த்த போது இரண்டு கம்ப்யூட்டர்கள் திருடு போயிருந்தது. அதன் மதிப்பு ரூ. 44 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்கு பதிந்து கம்ப்யூட்டர்கள் திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.
0 comments:
Post a Comment