]]
Showing posts with label திருட்டு. Show all posts
Showing posts with label திருட்டு. Show all posts

Monday, August 20, 2007

பரங்கிப்பேட்டையில் பசு மாடு திருடிய வாலிபர்கள் கைது

பரங்கிப்பேட்டையில் பசு மாடு திருடிய வாலிபர்கள் கைது

பரங்கிப்பேட்டையில் ரூ.15 ஆயிரம் மதிப்புடைய பசு மாட்டை திருடி சென்று கரிக்கடையில் விற்ற இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

பரங்கிப்பேட்டை மாதாக் கோவில் பகுதியை சேர்ந்தவர் விஜயா (42). இவருக்கு சொந்தமான பசு மாட்டை வீட்டிற்கு பின்புறம் கட்டியிருந்தார். அந்த மாட்டை அதே பகுதியை சேர்ந்த ரமேஷ், மகேஷ் ஆகியோர் திருடிச் சென்று பரங்கிப்பேட்டையில் உள்ள கரிக்கடையில் விற்றனர். இதன் மதிப்பு ரூ. 15 ஆயிரமாகும்.

இது குறித்து விஜயா கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், ஏட்டு முருகேசன் ஆகியோர் வழக்கு பதிந்து ரமேஷ் (30), மகேஷ் (32) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.

Saturday, July 28, 2007

பரங்கிப்பேட்டை அருகே இறால் பண்ணை அதிபர் வீட்டில்

பரங்கிப்பேட்டை அருகே இறால் பண்ணை அதிபர் வீட்டில் ரூ.45 ஆயிரம் திருட்டு

பரங்கிப்பேட்டை அருகே இறால் பண்ணை அதிபர் வீட்டின் ஜன்னலை உடைத்து ரூ. 45 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள பி.முட்லூரை சேர்ந்தவர் இஸ்மாயில். இவருடைய மகன் ஜெய்லானி (வயது 48).இவர் பரங்கிப்பேட்டை உள்பட பல இடங்களில் இறால் பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.


ஜெய்லானி வீட்டில் உள்ளவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளிïருக்கு சென்று விட்டனர். ஜெய்லானி மட்டும் வீட்டில் இருந்தார். அவர் நேற்று முன்தினம் இரவு தனது இறால் பண்ணையை பார்ப்பதற்காக சென்று விட்டார்.



நேற்று அதிகாலை வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் உள்ள ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டு கிடந்தது. உடன் வீட்டின் உள்ளே சென்று ஜெய்லானி பார்த்தார். வீட்டில் இருந்த பீரோவும் உடைந்து கிடந்தது. அதில் இருந்த ரொக்கப்பணம் ரூ.45 ஆயிரத்தை காணவில்லை.

இது பற்றி ஜெய்லானி பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், சப்- இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tuesday, July 10, 2007

பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தில் கம்ப்யூட்டர் திருட்டு

பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தில் கம்ப்யூட்டர் திருட்டு


பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தில் ரூ. 44 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு கம்ப்யூட்டர்களை திருடிசென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

பரங்கிப்பேட்டையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு கடந்த 6ம் தேதி இரவு மர்ம ஆசாமிகள் சிலர் உள்ளே நுழைந்துள்ளனர்.

சத்தம் கேட்டதும் வாட்ச்மேன் விமல் ராஜ், சக வாட்ச்மேன் ஜீவானந்தம் என்பவருடன் சத்தம் கேட்ட இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது பெட்டியுடன் நின்றிருந்த மர்ம ஆசாமிகள் பெட்டியை போட்டுவிட்டு ஓடி விட்டனர்.

பின்னர் மறுநாள் காலை வாட்ச் மேன் விமல் ராஜ், அலுவலக ஊழியர்களுடன் திருடுப் போன இடத்திற்கு சென்று பார்த்த போது இரண்டு கம்ப்யூட்டர்கள் திருடு போயிருந்தது. அதன் மதிப்பு ரூ. 44 ஆயிரம் ஆகும்.

இதுகுறித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்கு பதிந்து கம்ப்யூட்டர்கள் திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.