]]

Tuesday, August 28, 2007

தகவல் களஞ்சியம் - தெரிந்துக் கொள்ளுங்கள்

தகவல் களஞ்சியம் - தெரிந்துக் கொள்ளுங்கள்

சூரியன் உதிக்கும் நாடு என்று அழைக்கப்படுவது : ஜப்பான்.

நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் ரவீந்திரநாத் : தாகூர் ஆவார்.

இரு தலைநகரங்களைக் கொண்ட இந்திய மாநிலம் : ஜம்மு-காஷ்மீர்.

இந்தியாவில் முதன் முதலில் தொலைக்காட்சி நிலையம் தொடங்கப்பட்ட இடம் : டெல்லி.

நீதிபதிகளை மக்களே தேர்ந்தெடுக்கும் முறை மெக்சிகோ நாட்டில் உள்ளது.

நம் நாட்டு உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி பாத்திமா பீவி ஆவார்.

நம் நாட்டில் முதன்முதலாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலம் கேரளா ஆகும்.

நம் உலகின் பெருங்கடல்களாக பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவை உள்ளன.

நிமோனியா என்னும் நோய் எந்த உறுப்பை தாக்குகிறது? - நுரையீரல்.

ரிக்கட்ஸ் என்னும் நோய் எந்த சத்து குறைவால் ஏற்படுகிறது? - வைட்டமின் டி.

இரும்பு துரு பிடிக்கும் போது அதன் எடை...? - கூடுகிறது.

ஒப்படர்த்தி கோட்பாட்டை வலியுறுத்தியவர்? - ஐன்ஸ்டீன்.

76 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் வால் நட்சத்திரம் எப்படி அழைக்கப்படுகிறது? - ஹாலி.

ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை அறிமுகப்படுத்தியவர்கள்? - எகிப்தியர்கள்.

கண்ணீர் தேசம் என்று அழைக்கப்படும் நாடு? - இலங்கை.

உலகின் மிக உயரமான இடத்தில் உள்ள ஆராய்ச்சிக் கூடம் இந்தியாவின் எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது? - சிக்கிம்.

வண்ணத்துப் பூச்சி புழுவின் பெயர்?- காட்டர் பில்லர்.

மவுரிய சாம்ராஜ்ஜியத்தின் தலைநகராக விளங்கியது? - பாடலிபுத்திரம்.

பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்பட்ட மன்னர்? - ரஞ்சித் சிங்.

விக்கிரமாதித்தியன் என்று அழைக்கப்படுபவர்? - இரண்டாம் சந்திர குப்தர்.

உலகில் அதிக டி.வி. நிலையங்கள் உள்ள நாடு? - அமெரிக்கா.

அரபிக்கடலின் ராணி என்று அழைக்கப்படும் ஊர்? - கொச்சி.

புகழ்பெற்ற மயிலாசனம் இப்போது எங்குள்ளது? - லண்டன்.

0 comments: