]]
Showing posts with label புத்தக கண்காட்சி. Show all posts
Showing posts with label புத்தக கண்காட்சி. Show all posts

Tuesday, August 21, 2007

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் புத்தக கண்காட்சி

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் புத்தக கண்காட்சி துவக்கம்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மூன்று நாள் புத்தக கண்காட்சி நேற்று துவங்கியது. ஜிப்மர் மருத்துவமனையில் மூன்று நாள் புத்தக கண்காட்சி துவக்கவிழா நேற்று மாலை பாண்டிங் ஹாலில் நடந்தது.


ஜிப்மர் டீன் டாக்டர் ரெட்டி புத்தக கண்காட்சியை துவக்கி வைத்தார். மருத்துவ கண்காணிப்பாளர் (பொறுப்பு) சீனிவாசன், பதிவாளர் மகாதேவன், இதயநோய் சிகிச்சை பிரிவு துணைத்தலைவர் பாலச்சந்தர், அறுவை சிகிச்சை துறைத்தலைவர் கருண் அகர்வால், கணக்கு அதிகாரி கண்ணையன், கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அஜித் சகாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த புத்தக கண்காட்சியில் உடலியல், உடற் இயங்கியல், உயிர் வேதியியல், நுண் உயிரியல், நீரழிவு நோய், தோல் வியாதிகள், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை, கதிரியக்கவியல், குழந்தை மருத்துவம் உள்பட பல்வேறு தலைப்புகளில் கீழ் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கும் கண் காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளன.

தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த புத்தக கண்காட்சி நாளை(23ம் தேதி)யுடன் முடிவடைகிறது.

Friday, June 15, 2007

சென்னை பல்கலையில் புத்தக கண்காட்சி

சென்னை பல்கலையில் புத்தக கண்காட்சி


சென்னை : சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஒரு மாதம் நடைபெறவுள்ள புத்தக கண்காட்சி நேற்று துவங்கியது. இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புத்தகங்கள் 50 சதவீத சலுகை விலையில் விற்கப்படுகின்றன.

சென்னைப் பல்கலைக் கழக பதிப்புத் துறை சார்பில் பல்கலைக் கழக 150வது ஆண்டை முன்னிட்டு நேற்று முதல் ஜூலை 16ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சியை சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் எஸ்.ராமச்சந்திரன் நேற்று துவக்கி வைத்தார். கண்காட்சியில் இடம்பெறும் புத்தகங்கள் 50 சதவீத சலுகை விலையில் விற்கப்படுகின்றன. சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட 16 புத்தகங்கள் 35 சதவீத சலுகை விலையில் விற்கப்படுகின்றன. தமிழ் இலக்கியம், வரலாறு, பொருளாதாரம், இசை, அகழ்வாராய்ச்சி, சட்டம், திருக்குறள் ஆய்வுகள், தத்துவம், சமயம், அகராதிகள் என 241 புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இப்புத்தகக் கண்காட்சியை பல்வேறு மாணவர்களும், பொதுமக்களும் பார்வையிடுவதுடன், தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். ""சென்னைப் பல்கலைக் கழகத்தின் 150வது ஆண்டை முன்னிட்டு 150 புத்தகங்கள் வெளியிட முடிவு செய்யப்பட்டது. இவற்றில் 16 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வருகிற செப்டம்பர் மாதம் மேலும் 46 புத்தகங்கள் வெளியிடப்படவுள்ளன,'' என பல்கலைக் கழக துணைவேந்தர் எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.